எந்த கட்சிக்கும 40வீத வாக்குகளைப் பெற முடியவில்லை

எந்தவொரு கட்சிக்கும் 40 வீத வாக்குகளைப் பெற முடியவில்லை - ஜனாதிபதி

by Staff Writer 26-03-2018 | 7:18 PM
COLOMBO (News 1st) - பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 58 உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். அத்துடன் புதிய உறுப்பினர்களுக்கு மகாத்மா காந்தி மற்றும் நெல்ஸன் மண்டேலே தொடர்பிலான புத்தகங்களும் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி தெரிவித்த கருத்து...
வெற்றி தொடர்பில் எவ்வளவு உற்சாகமாக பேசினாலும் போட்டியிட்ட எந்தவொரு கட்சியினாலும்,40 வீத வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. பாரிய வெற்றியைப் பெற்றுக் கொண்டதாக சிலர் துள்ளிக் குதித்தாலும், இம்முறை தேர்தல் முடிவை, நாம் பாராளுன்ற தேர்தலுக்காக கணக்கிட்டுப் பார்த்தோம். முடிவுகளின்படி அதிகளவிலான பிரதேச சபைகளை வென்றுள்ள கட்சிக்கு, பாராளுமன்றத்தில் 103 ஆசனங்களே கிடைக்கும். அதன்படி எந்தவொரு கட்சிக்கும், தேர்தல் முடிவுகளின் படி ஆட்சியை அமைக்க அதிகாரம் கிடைக்கவில்லை. ஆகக்குறைந்தது 112 ஆசனங்களைப் பெற்றாலே பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்கலாம். https://www.youtube.com/watch?v=jL6XGQYOn6M