கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அவன்கார்ட் கொடுக்கல் வாங்கல்: கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

by Staff Writer 26-03-2018 | 8:05 PM
COLOMBO (News 1st) - அவன்கார்ட் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, உள்ளிட்ட 8 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணையை கொழும்பு மேலதிக நீதவான் ஜுலை மாதம் ஒன்பதாம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. அவன்கார்ட் மெரிடைம் சர்விசஸ் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியமொன்றை நடத்திச் செல்ல அனுமதித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் சந்தேகநபர்களான கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்த கருத்து...
எம்மை சிறையில் அடைக்கவே அவர்கள் முயற்சிக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதியின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ய முயன்றனர். பிரச்சினை இல்லை. பைசிகளில் கேட்டவரும் வென்றார். நாகபாம்பில் கேட்டவரும் வென்றார். விரயன் பாம்பில் நிறுத்தினாலும் நாம் வெல்வோம். நாம் விரியனை கொண்டுவருவோம். அடுத்து மஹிந்தவை கொண்டுவருவோம். https://www.youtube.com/watch?v=EsLsFvPXTss

ஏனைய செய்திகள்