தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் அதிகாரத்தை இழந்தது ஐ.தே.க

தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் அதிகாரத்தை இழந்தது ஐ.தே.க

தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் அதிகாரத்தை இழந்தது ஐ.தே.க

எழுத்தாளர் Staff Writer

26 Mar, 2018 | 3:23 pm

COLOMBO (News 1st) – ஐக்கிய தேசியக் கட்சியை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் அதிகாரமும் அந்தக் கட்சியிடமிருந்து பறிபோயுள்ளது.

தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் உறுப்பினர்கள் இன்று காலை கூடியபோது, புதிய மேயருக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் நாவலகே ஸ்டென்லி டயஸ் மேலதிக வாக்குகளைப் பெற்று மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு சார்பாக 23 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநகர மேயர் சுநேத்ரா ரணசிங்கவிற்கு 21 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவிற்கும் தலா 19 ஆசனங்கள் கிடைத்திருந்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி 6 ஆசனங்களைப் பெற்றிருந்ததுடன் மக்கள் விடுதலை முன்னணி 4 ஆசனங்களை தன்வசப்படுத்தியிருந்தது.

இதேவேளை, கெபித்திகொல்லாவ பிரதேச சபையிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண இன்று ஆட்சியமைத்துள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்தப் பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியும், பொதுஜன பெரமுணவும் சம அளவில் ஆசனங்களை பெற்றிருந்தன.

இன்று நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண மேலதிகமாக ஒரு வாக்கினைப் பெற்று கெபித்திகொல்லாவ பிரதேச சபையின் ஆட்சியை உறுதிப்படுத்தியது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்