விமான சேவைகள் சர்ச்சை தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அரிய தீர்மானம்

விமான சேவைகள் சர்ச்சை தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அரிய தீர்மானம்

விமான சேவைகள் சர்ச்சை தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அரிய தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2018 | 4:46 pm

COLOMBO (News 1st) – ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாபதி ஆணைக்குழு, விடயம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரை, கருத்துக்களை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதேவேளை மோசடி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு அதன் முதற் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த 14 ஆம் திகதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆணைக்குழு, 2006 ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் திகதியில் இருந்து 2018 ஜனவரி 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்