முத்துராஜவெல சரணாலயம் தொடர்பில் மீண்டும் விசேட விசாரணை

முத்துராஜவெல சரணாலயம் தொடர்பில் மீண்டும் விசேட விசாரணை

முத்துராஜவெல சரணாலயம் தொடர்பில் மீண்டும் விசேட விசாரணை

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2018 | 4:29 pm

COLOMBO (News 1st) – முத்துராஜவெல சரணாலயம் தொடர்பில் மீண்டும் விசேட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சரணாலய சுற்றுச்சூழலுக்கு பாரியளவு சேதமேற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் பி. பீ. ஹேமந்த தெரிவித்துள்ளார்.

சூழலை சேதப்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னர், குறித்த பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உரித்தானதா என்பது தொடர்பில் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் விடயத்திற்கான அமைச்சினூடாக தகவல்களை பெற்றுக் கொண்டதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

முத்துராஜவெல சரணாயத்தில் இடம்பெறுகின்ற சூழலுக்கு பாதகமான செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சரணாலயத்தில் இடம்பெறுகின்ற கட்டட நிர்மாணப் பணிகள், காணி நிரப்பும் பணிகள் ஆகியவற்றை நிறுத்துமாறு ஜனாதிபதி அறிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்