மாலபேயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

மாலபேயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

மாலபேயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2018 | 10:44 pm

COLOMBO (News 1st) – மாலபே சயிட்டம் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஹிபுடான முல்லேரியாவைச் சேர்ந்த 46 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஜீப் வண்டியில் வந்து பின்னர் வண்டியை விட்டு இரங்கி தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்