சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பஸ்கள் சேவையில்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பஸ்கள் சேவையில்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பஸ்கள் சேவையில்

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2018 | 4:03 pm

COLOMBO (News 1st) – சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபை, மேலதிகமாக 2000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.

எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையில் இந்த பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ்நிலையம், உட்பட்ட 103 டிப்போக்களை உள்ளடக்கிய வகையில், இந்த விசேட பஸ்சேவைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான மேலதிக பஸ்களை, நுவரெலியா, கண்டி, பதுளை உள்ளிட்ட பிரதேச அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்