ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்து வேட்டை

ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்து வேட்டை

ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் கையெழுத்து வேட்டை

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2018 | 6:26 pm

COLOMBO (News 1st) – அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று முல்லைத்தீவில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

இந்த கையெழுத்து வேட்டையை தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மாற்றத்திற்கான அணி ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகிலிருந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று கிளிநொச்சி வரை கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதற்கு உதவுமாறு அவரது இரண்டு பிள்ளைகளும் நேற்று கொழும்பில் வடமாகாண ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்