அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியமை தொடர்பில் சஞ்சய் மஞ்சேகர் கருத்து

அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியமை தொடர்பில் சஞ்சய் மஞ்சேகர் கருத்து

அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியமை தொடர்பில் சஞ்சய் மஞ்சேகர் கருத்து

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2018 | 3:54 pm

COLOMBO (News 1st) – அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய சந்தர்ப்பம் துரதிஷ்டவசமானது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சர்வதேச வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சேகர் தெரிவித்துள்ளார்.

நியூஸ்பெஸ்ட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட வீரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதையும் சஞ்ஜய் மஞ்சேகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனமும் இவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்