அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணை

அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணை

அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2018 | 2:57 pm

COLOMBO (News 1st) – தென்னாபிரிக்காவுடனான கிரிக்கெட் போட்டியின் போது அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கேப் டவுனில் நேற்று நடைபெற்ற போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது பந்தை சேதப்படுத்தியதை அவுஸ்திரேலிய வீரரான Cameron Bancroft ஒப்புக்கொண்டார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் முழுமையாக அறிந்திருக்கவில்லை என அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.

இது தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் தென்னாபிரிக்காவிற்கு செல்லவுள்ளனர்.

பந்தை சேதப்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஜேம்ஸ் சதர்லேன்ட் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்