ஜப்பான் பிரதமர் மக்களிடம்  மன்னிப்பு கோரினார்

அரசாங்கம் மீதான நம்பிக்கை அற்றுப்போனமை தொடர்பில் ஜப்பான் பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கோரினார்

by Staff Writer 25-03-2018 | 3:25 PM
COLOMBO (News 1st) - நண்பர்களுக்கு உதவியதாக தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் காரணமாக அரசாங்கம் மீதான நம்பிக்கை அற்றுப்போனமை தொடர்பில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மக்களிடம் இன்று மன்னிப்பு கோரியுள்ளார். தொழில் கட்சியின் வருடாந்த சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பொழுதே ஜப்பான் பிரதமர் இது தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ளார். இம்முறை வருடாந்த சம்மேளனம் நடைபெற்ற வளாகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான கலக தடுப்பு பொலிஸாரும் அழைக்கப்பட்டிருந்தனர். பிரதமர் அபே பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்கார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்கத்திற்கு சொந்தமான காணியை தமது மனைவிக்கு நெருக்கமான ஒரு தரப்பினருக்கு தள்ளுபடி விலையில் வழங்கியதாக வௌியான தகவலை அடுத்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார்.