by Bella Dalima 24-03-2018 | 10:37 PM
Colombo (News 1st)
2017 ஆம் ஆண்டிற்கான ரைகம் விருது வழங்கல் விழா (Raigam Tele Awards) தாமரை தடாகத்தில் இன்று நடைபெற்றது.
14 ஆவது ரைகம் விருது வழங்கும் விழா பல கலைஞர்களின் தலைமையில் இன்று மாலை ஆரம்பமானது.
இதில் புலனாய்வு செய்தி சேகரிப்பாளருக்கான விசேட ஜூரி விருது TV1 தொலைக்காட்சியில் ஔிபரப்பான ''ப்ரபூன் பந்தனாகாரய அதுலத்வூ ரகச'' (முக்கிய நபர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதின் இரகசியம்) என்ற நிகழ்ச்சி தொகுப்பிற்கு கிடைத்தது. இவ்விருதை குறித்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் நுவான் சத்துரங்க பெற்றுக்கொண்டார்.
வருடத்தின் சிறந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கான விருது ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டின் ''கிராமத்திற்கு விளையாட்டு'' நிகழ்ச்சிக்காக சஜித் கோவின்னவிற்கு வழங்கப்பட்டது.
அத்துடன், வருடத்தின் சிறந்த கேள்வி பதில் நிகழ்ச்சிக்கான விருதை, சிரச டிவியில் ஒளிபரப்பாகும் ''பென்டதலன் பாகம் இரண்டு'' சுவீகரித்தது.
வருடத்தின் சிறந்த ஆங்கில நிகழ்ச்சித் தொகுப்பாளர் விருதை, TV1 இன் பேர்னடீன் ஜயசிங்க பெற்றுக்கொண்டார்.