டீசல், பெட்ரோலின் விலையை அதிகரித்தது லங்கா IOC

டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை அதிகரித்தது லங்கா IOC

by Bella Dalima 24-03-2018 | 3:21 PM
Colombo (News 1st) லங்கா IOC நிறுவனம் நேற்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் 5 ரூபாவாலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 9 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், லங்கா IOC நிறுவனத்தின் ஒரு லிட்டர் பெட்ரோல் 126 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. எவ்வாறாயினும், சுப்பர் டீசல், சுப்பர் பெட்ரோலின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என லங்கா IOC நிறுவனத்தின் உப தலைவர் சித்தார்த் அக்ரவால் தெரிவித்துள்ளார். ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் 18 ரூபா நட்டம் ஏற்பட்ட போதிலும், டீசலை 5 ரூபாவால் மாத்திரம் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும், எரிபொருளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார்.