பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்ந்தும் ஸ்தம்பிதம்

பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்ந்தும் ஸ்தம்பிதம்

by Staff Writer 22-03-2018 | 7:27 AM
COLOMBO (News 1st) - சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தௌிவுப்படுத்திய போதிலும் அதற்கு தீர்வு கிடைக்காமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தயால் அபேசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை தமது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று 23 ஆவது நாளாக தொடர்கின்றது. தமது பிரச்சினை தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்ததை போன்று சாதகமான பதில் இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார். மாதாந்த நிலுவைக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி 15,000 இற்கும் மேற்பட்ட கல்விசாரா ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர். கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல்கலைக்கழங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. https://www.youtube.com/watch?v=7v35YQPGM64