நாமல் ராஜபக்ஸ அமெரிக்காவினுள் நுழையத் தடை

நாமல் ராஜபக்ஸ அமெரிக்காவினுள் நுழையத் தடை

by Bella Dalima 22-03-2018 | 9:02 PM
Colombo (News 1st)  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, அமெரிக்காவின் - ஹூஸ்டனுக்கு செல்வதற்கு தயாரானபோது அமெரிக்க அரசு அவருக்கு அனுமதி மறுத்துள்ளது. ரஷ்யாவிற்கு சென்றிருந்தபோது அவர் இந்த பயணத்தை திட்டமிட்டிருந்தார். ரஷ்யாவின் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ரஷ்யாவிற்கு சென்றிருந்தார். அமெரிக்காவின் ஹுஸ்டன் நகருக்கு பயணிப்பதற்காக நாமல் ராஜபக்ஸ இன்று காலை மாஸ்கோ விமான நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில், அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இந்த பயணத்திற்கு அனுமதி வழங்கவில்லை என எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் அவருக்கு அறிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, இவ்வாறான தீர்மானமொன்றை எடுப்பதற்கு அமெரிக்காவிற்கு உரிமையுள்ளது என நாமல் ராஜபக்ஸ தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். எவ்வாறாயினும், அதற்கான காரணம் தொடர்பில் உரிய முறையில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.