வரலாற்றில் பதிவானார் ரோசி சேனாநாயக்க

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயராக ரோசி சேனாநாயக்க வரலாற்றில் பதிவு

by Bella Dalima 22-03-2018 | 6:57 PM
Colombo (News 1st)  கொழும்பு மேயராக நியமிக்கப்பட்ட ரோசி சேனாநாயக்க தனது கடமைகளை இன்று ஆரம்பித்தார். கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயராக ரோசி சேனாநாயக்க வரலாற்றில் பதிவாகியுள்ளார். அமைச்சர்கள் உள்ளிட்ட சிலரின் பங்கேற்புடன், கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார். இதன்போது, ரோசி சேனாநாயக்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூன்றில் இரண்டு பகுதியினர் குறைந்த வருமானம் பெறும் குடிசைவாசிகளாவர். எமது 10 வருட திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளையும் கொண்ட 50 ஆயிரம் வீடுகளை வழங்குவதாக நாம் வாக்குறுதியளித்துள்ளோம். 2020 ஆம் ஆண்டளவில் தெற்காசியாவின் தொழில்நுட்ப பரிமாற்றல் நகரமாக துறைமுக நகரம் மாறுகின்ற சந்தர்ப்பத்தில், அதற்கு ஒப்பான, பசுமையான, அழகிய, தூய்மையான, அனர்த்தங்கள் ஏற்படாத நகரமாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளை மாற்றுவற்கு நாம் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதற்கு உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.