by Bella Dalima 22-03-2018 | 3:37 PM
Colombo (News 1st)
2014 ஆம் ஆண்டு பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த அசம்பாவிதங்களில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 12 பேருக்கு தலா 5 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் 85 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 36 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்தமாக 153 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.