நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

by Staff Writer 21-03-2018 | 2:46 PM
COLOMBO (News 1st) - பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளார். சபாநாயகரின் அலுவலகத்தில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். 14 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதில் கையொப்பமிடவில்லை.  

ஏனைய செய்திகள்