நாட்டில் 53,000 இற்கும் அதிக வேலையற்ற பட்டதாரிகள்

நாட்டில் 53,000 இற்கும் அதிக வேலையற்ற பட்டதாரிகள்

by Staff Writer 21-03-2018 | 11:16 AM
COLOMBO (News 1st) - நாட்டில் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 53,000 தாண்டியுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரத்தியேக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னே ஞானாநந்த தேரர் குறிப்பிட்டார். இதேவேளை, அரசில் பட்டதாரிகளுக்கான 60,000 வெற்றிடங்கள் நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் வேலையற்ற பட்டதாரிகள் அரச தொழில்களை மாத்திரம் எதிர்ப்பார்ப்பது பயனற்ற நடவடிக்கை அரச பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அரசியலில் நிலவும் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.