by Bella Dalima 21-03-2018 | 4:09 PM
Colombo (News 1st)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கு இன்று (21) மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் அரச சட்டத்தரணிகளால் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் நான்காம் கட்ட விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 2005 ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின்போது பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதிப் மாஸ்டர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.