உளுந்து மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு

உளுந்து மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானம்

by Bella Dalima 21-03-2018 | 4:23 PM
Colombo (News 1st)  ஒரு கிலோகிராம் உளுந்தின் மீது 50 ரூபா இறக்குமதி வரியை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு உளுந்து செய்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வாழ்க்கைச் செலவு தொடர்பிலான குழு நேற்று (20) கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தற்போது இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோகிராம் உளுந்திற்கு 100 ரூபா வரி அறவிடப்படுகின்றது. புதிய வரி திருத்தத்திற்கு அமைய இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோகிராம் உளுந்தின் மீது 150 ரூபா வரி விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.