திருமலையில் 50 பழமரக் கிராமங்களை உருவாக்கத்திட்டம்

திருகோணமலையில் 50 பழமரக் கிராமங்களை உருவாக்கத் திட்டம்

by Bella Dalima 20-03-2018 | 5:08 PM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தில் 50 பழமரக் கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 24 பழமரக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி கமநல சேவைகள் நிலையத்தின் கமநல அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.புனித குமார் தெரிவித்தார். இதன் பிரகாரம், ஒரு பழமரக் கிராமத்திற்கு 900 பழமரக் கன்றுகள் வழங்கப்படுகின்றன. பயனாளி ஒருவருக்கு 20 முதல் 45 வரையான ஒரே இன பழக்கன்றுகள் இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட உதவி கமநல சேவைகள் நிலையம் தெரிவித்தது. மா, மாதுளை முதலான பழ மரக்கன்றுகளும் வழங்கப்படுகின்றன.