சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்

சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்

by Bella Dalima 20-03-2018 | 3:49 PM
தமிழக முன்னாள் முதல்வர், காலஞ்சென்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் உடல்நலக் குறைவால் இன்று (20) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 76. நோய்த்தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 1.30 அளவில் மரணமடைந்துள்ளார். 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே சுகவீனமுற்றிருந்த அவருக்கு கல்லீரலும் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு மாற்று சிறுநீரகமும் கல்லீரலும் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், விபத்து ஒன்றில் மூளைச்சாவடைந்த 19 வயது இளைஞர் ஒருவரின் கல்லீரலும் சிறுநீரகமும் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி நடராஜனுக்கு பொருத்தப்பட்டது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடராஜன் விடுதி ஒன்றில் தங்கியிருந்து வந்த நிலையில், மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.