ககிசோ ரபாடாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

ககிசோ ரபாடாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

by Bella Dalima 20-03-2018 | 5:35 PM
ககிசோ ரபாடாவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அவர் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ககிசோ ரபாடா, அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டிவன் ஸ்மித்துடன் மோதலில் ஈடுபட்டார். இந்த செயற்பாடானது கிரிக்கெட்டின் மகத்துவத்தை பாதிக்கும் விதத்தில் அமைந்ததாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதனால் சர்வதேச கிரிக்கெட் பேரவை ககிசோ ரபாடாவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதித்ததோடு, 50 வீத போட்டிக்கட்டணத்தையும் அபராதமாக விதித்தது. தற்போதைய நிலையில், அவரது தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுதினம் (22) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.