உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் உயிரிழந்தது

உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் உயிரிழந்தது

by Bella Dalima 20-03-2018 | 4:07 PM
உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் கென்யாவில் உயிரிழந்துள்ளது. கென்யாவிலுள்ள Ol Pejeta வனவிலங்குகளுக்கான தனியார் அமைப்பு இந்த தகவலை வௌியிட்டுள்ளது. சுடான் எனப்படும் 45 வயதான ஆண் காண்டாமிருகம் கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்தது. சுடானுக்கு வயது முதிர்வு காரணமான உடல் உபாதைகள் இருந்தன. தசை மற்றும் எலும்புகள் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருந்தன. தோலில் காயம் ஏற்பட்டிருந்தது. கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதன் நிலைமை மிக மோசமாகியது. அதனால் எழுந்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதனை கருணைக் கொலை செய்ய முடிவு செய்திருந்தார்கள். சுடான் இரண்டு வெள்ளை பெண் காண்டாமிருகங்களான நஜின், ஃபட்டு ஆகியவற்றுடன் வசிந்து வந்தது. இந்த நிலையிலேயே சுடான் உயிரிழந்துள்ளது. வௌ்ளை இன காண்டாமிருகங்களில் இரண்டு பெண் காண்டாமிருகங்கள் மட்டுமே தற்போது உலகில் உள்ளன. சுடானின் இந்த இழப்பு வனவிலங்கு ஆர்வலர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.