தலவத்துகொட விபத்து: BMW கார் உரிமையாளர் கைது

தலவத்துகொட விபத்து: BMW கார் உரிமையாளர் கைது

by Staff Writer 19-03-2018 | 3:49 PM
COLOMBO (News 1st) - தலவத்துகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தையடுத்து B M W காரை தியவன்னாவ ஓயவில் வீழ்த்திய பின்னர் தலைமறைவாகிய காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தின் பின்னர் சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார். சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக பொலிஸில் இன்று ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் சந்தேகநபரை மருத்துவ பரிசோதனைக்காக அங்கொட ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த காரின் சாரதியான சந்தேகநபர் கடுவல நீதவான் முன்னிலையில் இன்று மாலை ஆஜர்படுத்தப்படவுள்ளார். https://www.youtube.com/watch?v=Fv6ie-7fvls