ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை தூதுக்குழு பங்கேற்பு

ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கை தூதுக்குழு பங்கேற்பு

by Staff Writer 19-03-2018 | 4:12 PM
COLOMBO (News 1st) - ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான தூதுக்குழு இன்று பங்கேற்கவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர் சரத் அமுணுகம, அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் இன்றைய கூட்டத்தில பங்கேற்வுள்ளனர். இலங்கையின் இணை அணுசரனையில் 2015ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழு தெளிவுபடுத்தவுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம், காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான சட்டம், அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட, பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலான பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளது.