கொழும்பு மாநகர சபை மேயராக ரோசி சேனாநாயக்க

கொழும்பு மாநகர சபை மேயராக ரோசி சேனாநாயக்க அறிவிப்பு

by Staff Writer 19-03-2018 | 8:28 PM
COLOMBO (News 1st) - 11 மாவட்டங்களிலுள்ள 15 உள்ளூராட்சிமன்றங்களுக்கான மேயர், பிரதி மேயர் மற்றும் தவிசாளர் , உப தவிசாளர் ஆகிய பதவிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கடந்த சனிக்கிழமை இதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது. கொழும்பு மாநகர சபையின் மேயராக ரோசி சேனாநாயக்கவும் பிரதி மேயராக மொஹமட் துல்பா மொஹமட் இக்பாலும் அறிவிக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்துறை பிரதேச சபைக்கான தவிசாளராக எம். ஜயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தவிசாளராக குணசீலன் கிளாரன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபைக்கான தவிசாளராக அருணாசலம் அய்யாப்பிள்ளை தெரிவாகியுள்ளதுடன், உப தவிசாளராக சிவகுமாரன் ஶ்ரீரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுகுடியிருப்பு பிரதேச சபைக்கான தவிசாளராக செல்லையா பிறேமகாந்த் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தவிசாளராக கனகசுந்தரசாமி ஜனமேயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயராக முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அத்தாவுல்லாவின் மகன் அத்தாவுல்லா அஹமட் சகி நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தவிசாளராக அப்துல்லா கபூர் அஸ்மி நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை வெருகல் பிரதேச சபையின் தலைவராக கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம் தெரிவாகியுள்ளதுடன், உப தவிசாளராக தேவநாயகம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளராக தங்கராஜ் கிஷோகுமாரும் பிரதி தவிசாளராக காலிமுத்து சிவசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நுவரெலியா மாநகர சபைக்கான பிரதி மேயராக முன்னாள் பிரதியமைச்சர் வி.புத்திரசிகாமனியின் மகள் யதர்ஷனா புத்திரசிகாமனி நியமிக்கப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்டத்தின் பேருவளை நகர சபையின் தலைவராக மொஹமட் நாசீம் மொஹமட் மசாஹீம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவராக மொஹமட் ரபாய்தீன் மொஹமட் முனாவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=MMclaJyHMGw