கொட்டகலையில் வைத்தியர்களின் பகிஷ்கரிப்பு நிறைவு

கொட்டகலையில் வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

by Staff Writer 19-03-2018 | 3:57 PM
COLOMBO (News 1st) - கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் வைத்தியர்கள் அச்சுருத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16 ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் வைத்தியரை அச்சுறுத்திய அரசியல்வாதி இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சந்தேகநபர் கைது செய்யப்பட்டதை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதாக கொட்டகலை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி சாவித்திரி ரவிவர்மா நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார். அதற்கமைய இன்று முதல் வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவு வழமை போன்று செயற்படும் என அவர் குறிப்பிட்டார். வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொட்டகலை வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. எவ்வாறாயினும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோருக்கான அனைத்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டன. கொட்டகலை வைத்தியசாலையின் வைத்தியரை அச்சுறுத்தி வாகனம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில், திம்புலபத்தன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.