அரசியல்வாதிகளுக்கிடையில் ஒற்றுமை அவசியம்-ஜனாதிபதி

அரசியல்வாதிகளுக்கிடையில் ஒற்றுமை அவசியம் - ஜனாதிபதி

by Staff Writer 19-03-2018 | 7:32 PM
COLOMBO (News 1st) - அரசியல்வாதிகளுக்கு நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுடத்த வேண்டும் என்ற தேவை இல்லை எனவும் எவ்வாறாவது அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் தேவை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு இடையில் ஒற்றுமை அவசியம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் - புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூட திறப்பு விழாவின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் நிதி உதவியுடன் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் ​போது வட மாகாண பட்டத்தாரிகள் 197 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடித்தக்கது. இதன் போது ஜனாதிபதி தெரிவித்த கருத்து...
நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது பிரச்சினையாகும். அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்வைத்துள்ளனர். நாட்டில் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு இல்லை. எவ்வாறாவது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் தேவை. ஆகவே நாட்டில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு இடையில் ஒற்றுமை அவசியமாகும். https://www.youtube.com/watch?v=veTRH_gwL2k