மொரிஷியஸ் ஜனாதிபதி இராஜினாமா

மொரிஷியஸ் ஜனாதிபதி இராஜினாமா

மொரிஷியஸ் ஜனாதிபதி இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2018 | 8:56 pm

COLOMBO (News 1st) – மொரிஷியஸ் ஜனாதிபதி அமீனா குரிப் ஃபாகிம் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் அவர் ஜனாதிபதி அலுவலகத்திலுருந்து வௌியேறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து 58 வயதான அமீனா குரிப் ஃபாகிம் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், தாம் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அமீனா பதவியிலிருந்து விலகவுள்ளதாக பிரதமர் பிரவீன் ஜுக்நாத் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

எனினும் அமீனா குரிப் ஃபாகிம், தொடர்நதும் பதவி வகிப்பாரென ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையொன்றை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்