ரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதி யார்?

ரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதி யார்?

by Staff Writer 18-03-2018 | 9:16 PM
COLOMBO (News 1st) - ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பதவிக்காலம் முடிவுற உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உட்பட எட்டு பேர் போட்டியிடுகின்றனர். இம்முறை ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். சுமார் 70 சதவீதமான மக்கள் விளாடிமிர் புட்டினுக்கு ஆதரவாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை அதிகாரியான புட்டின் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். புட்டின் தேர்தலில் வெற்றி பெற்றால் 2024 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் முறையும் புட்டின் வெற்றி பெறும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் ரஷ்ய ஜனாதிபதியாக இருந்தவர் என்ற பெயரை விளாடிமிர் புட்டின் பெறுவார். வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருவதோடு இன்று இரவு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.