சிரிய வான்வழித் தாக்குதலில் 30 பேர் பலி

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 30 பேர் பலி

by Staff Writer 18-03-2018 | 4:28 PM
COLOMBO (News 1st) - சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் அரச படையினரால் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலிருந்து மக்கள் வௌியேற்றப்படும் சந்தர்ப்பத்தில் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. சிரியா அரச படையினரால் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் Kafr Batna மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள் 6 பேர் உட்பட 40 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். சிரியாவின் டமஸ்கஸிலிருந்து நேற்று 10,000 பேர் வரை வௌியேற்றப்பட்ட நிலையில், தாக்குதல்கள் தொடர்வதாக கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. டமஸ்கஸில் மாத்திரம் கடந்த மாதம் 18 ஆம் திகதியிலிருந்து ஒரு மாத காலமாக நடத்தப்பட்டுவரும் இந்தத் தொடர் தாக்குதல்களினால் மனித உரிமை நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.