மக்கள் பணத்தை திருட மாட்டோம் என சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உறுதிமொழி

மக்கள் பணத்தை திருட மாட்டோம் என சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உறுதிமொழி

மக்கள் பணத்தை திருட மாட்டோம் என சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உறுதிமொழி

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2018 | 8:22 pm

COLOMBO (News 1st) – அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவான உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள சுமார் 1200 உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

ஊழல் மோசடிகளை ஒழித்து மக்களுக்கு அர்பணிப்புடன் சேவையாற்றுவதாக இதன் போது அவர்கள் உறுதிமொழியேற்றனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலம் கொழும்பு மாநகர சபைக்கு தெரிவாகியுள்ள உமாச்சந்திரா பிரகாஷும் இதில் கலந்து கொண்டிருந்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்