தலவத்துகொடையில் விபத்திற்குள்ளான சொகுசு காரை செலுத்தியவர் யார்?

தலவத்துகொடையில் விபத்திற்குள்ளான சொகுசு காரை செலுத்தியவர் யார்?

தலவத்துகொடையில் விபத்திற்குள்ளான சொகுசு காரை செலுத்தியவர் யார்?

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2018 | 8:43 pm

COLOMBO (News 1st) – தலவத்துகொடையில் விபத்திற்குள்ளான சொகுசு காரை செலுத்தியவர் யார் என்பதை இதுவரை அடையாளம் காண முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகையும் இது தொடர்பில் செய்தி வௌயிடப்பட்டிருந்தது.

இந்த சொகுசு காரை ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவரின் மகன் செலுத்தியுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

எனினும் வாகனத்தின் உண்மையான உரிமையாளர் அல்லது சாரதி இதுவரை பொலிஸில் ஆஜராகவில்லை.

அதிக பெறுமதியான இந்த சொகுசு கார் விபத்திற்குள்ளான பின்னர் அதனை அவ்விடத்தில் விட்டுச் சென்று உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளமை பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை தலவத்துகொடையில் நேற்று (17) விபத்திற்குள்ளான காரை தனது உறவினர் ஒருவரே செலுத்தியதாக உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கபீர் ஹாஷீம் இன்று பிற்பகல் விடுத்தள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தலவத்துகொடையில் 2018 – 03 – 17 ஆம் திகதி பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் மேலும் இரண்டு காரும் விபத்திற்குள்ளானமை தொடர்பில் சில இணையத்தளங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் நான் கவனம் செலுத்தியுள்ளேன்.

விபத்திற்குள்ளான காரை எனது உறவினர் ஒருவரே செலுத்தியுள்ளார் என்பதுடன், அவர் எனது அமைச்சின் அதிகாரி ஒருவர் அல்ல என்பதுடன், அவர் எனது அரசியல் விடயங்களில் எவ்வகையிலும் தொடர்புபடவில்லை என்பதனையும் அறியத் தருகிறேன்.

இது தொடர்பில் பொலிஸார் முன்னெடுக்கும் பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க நான் எவ்வேளையிலும் தயாராக இருக்கிறேன் என்பதனை கூற விரும்புகிறேன்.

நன்றி

இப்படிக்கு – நம்பிக்கையுடன்

கபீர் ஹாஷீம்
உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்