சுதந்திரக்கிண்ண  இறுதிப் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன

சுதந்திரக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன

சுதந்திரக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2018 | 4:06 pm

COLOMBO (News 1st) – சுதந்திரக்கிண்ண முக்கோண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ள இந்தப்போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

இந்தத்தொடரில் பங்களாதேஷ் அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் , இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரராக பதிவாகியுள்ளார்.

அவர் 4 போட்டிகளில் 204 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இரண்டாமிடத்தில் பங்களாதேஷ் அணியின் முஸ்பிகூர் ரஹீம் காணப்படுவதோடு இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் மூன்றாமிடத்தில் நீடிக்கின்றார்.

முஷ்பிகூர் ரஹீம் 4 போட்டிகளில் 190 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 4 போட்டிகளில் 188 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் இந்தப்போட்டியில் அதிக ஓட்டங்களை பெறுகின்ற வீரர் , தொடரில் அதிக ஓட்டங்களை விளாசிய வீரர் என்ற சிறப்பை பெறுவார்.

இதேவேளை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வொசிங்டன் சுந்தர் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர் 4 போட்டிகளில் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்