அவசரகால நிலையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ​கைச்சாத்து

அவசரகால நிலையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ​கைச்சாத்து

அவசரகால நிலையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ​கைச்சாத்து

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2018 | 3:20 pm

COLOMBO (News 1st) – நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலையை உடனடி அமுலுக்கு வரும் வகையில் நீக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு நாடு திரும்பிய ஜனாதிபதி, வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒருசில பகுதிகளில் நிலவிய திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமையைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 6 ஆம் திகதி அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்