by Staff Writer 18-03-2018 | 3:38 PM
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் நீதி அமைச்சிடம் கோருவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இரு நாட்டு சட்டவிதிமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்பிரகாரம் வௌிவிவகார அமைச்சினூடாக சிங்கப்பூர் நீதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு இரண்டு தடவைகள் நீமன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அவர் பதில் வழங்கவில்லை.
இதன் காரணமாகவே அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவானினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.