அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை இன்று திறந்து வைப்பு

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை இன்று திறந்து வைப்பு

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை இன்று திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2018 | 8:14 pm

COLOMBO (News 1st) – முன்னாள் எதிர்க் கட்சித்தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது.

பண்ணாகத்திலுள்ள, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை எதிரக்கட்சித்தலைவர் இரா.சம்மந்தன் திறந்துவைத்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியூடாக 1956 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்திற்கு தெரிவான அமிர்தலிங்கம், 1972 இல் ஆண்டில் தமிழ்க் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார்.

1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் வெற்றிபெற்ற அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்