வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2018 | 3:51 pm

Colombo (News 1st) 

கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

வவுனியாவைச் சேர்ந்த 70 வயதான சண்முகநாதன் தேவகன் என்பவரே நேற்று (16) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சட்ட நடவடிக்கைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி சண்முகநாதன் தேவகன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்