ஷகிப் அல் ஹசனுக்கும் நூருல் ஹசனுக்கும் 25% அபராதம்

ஷகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

by Bella Dalima 17-03-2018 | 4:55 PM
Colombo (News 1st)  நேற்று (16) நடைபெற்ற சுதந்திரக் கிண்ண முக்கோண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் போது கடைசி ஓவரில் நோ பால் வீசப்பட்டதாகத் தெரிவித்து இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து, பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவிகித அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடத்தை விதிமுறைகளை மீறியமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இருவருக்கு எதிராகவும் நிலை 1 டிமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளதாக ICC அறிவித்துள்ளது. கடைசி ஓவரின் போது நோ பால் விவகாரம் தொடர்பாக பங்களாதேஷ் வீரர் மகமதுல்லா நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணியினருக்கு இடையில் ஏற்பட்ட இந்த சர்ச்சை மோதலாக மாறியது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மஹமதுல்லாவின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.