குடிநீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள்

குடிநீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

by Bella Dalima 17-03-2018 | 7:47 PM
உலகின் மிக முக்கிய நாடுகளில் விற்பனையாகும் குடிநீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது. போத்தல்களில் குடிநீரை நிரப்பி, அதனை மூடும் பணிகளின் போது பிளாஸ்டிக் துகள்கள் கலப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, கென்யா, லெபனான், மெக்ஸிகோ, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் விற்பனையாகும் குடிநீர் போத்தல்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 93 % குடிநீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நைலான், பொலிதீன், பாலிப்ரோப்லைன் ஆகிய துகள்கள் குடிநீரில் இருந்துள்ளன. இவை குடிநீர் போத்தல்களின் மூடிகளை செய்யப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஆகும். ஒரு குடிநீர் போத்தலில் அதிகபட்சமாக 10,000 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.