ரஷ்யக் காதலரை இரகசியமாக மணந்தார் ஸ்ரேயா

ரஷ்யக் காதலரை இரகசியமாக மணந்தார் ஸ்ரேயா

ரஷ்யக் காதலரை இரகசியமாக மணந்தார் ஸ்ரேயா

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2018 | 7:04 pm

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நாயகியாக வலம் வரும் நடிகை ஸ்ரேயா சரண் அவரது ரஷ்ய காதலரை மும்பையில் இரகசியத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.

ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து அழகிய தமிழ் மகன், இந்திரலோகத்தில் ந. அழகப்பன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், உத்தமபுத்திரன், சிக்குபுக்கு, ரவுத்திரம், ராஜபாட்டை, சந்திரா, தோழா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் சில இந்தி, ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர். டெல்லியில் பட்டப்படிப்பு முடித்து மாடலிங் உலகில் புகுந்தார். மும்பையில் தங்கி இருந்து சினிமா படங்களில் நடித்துக் கொண்டு மாடலிங் செய்து வந்தார்.

ஸ்ரேயா ரஷ்யாவைச் சேர்ந்த ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞரைக் காதலித்து வந்தார்.

மிகப்பெரும் கோடீசுவரரான இவர் சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரரும் ஆவார்.

உதய்ப்பூரில் இருவரும் சந்தித்துக்கொண்ட போது நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மார்ச் மாதம் திருமணம் செய்வதாக அறிவித்த ஸ்ரேயா, திருமணத் திகதியை அறிவிக்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், ஸ்ரேயா – ஆன்டிரே கோச்சேவ் திருமணம் மும்பையில் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் டென்னிஸ் வீரர் மனோஜ் பாஜ்பாய், நடிகை சபனா ஆஸ்மி மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இந்த திருமணம் பற்றிய தகவல் தற்போது தான் மும்பை சினிமா வட்டாரத்தில் பரவியுள்ளது.

திருமணத் தகவலை ஸ்ரேயாவும் உறுதி செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்