யாழ். மத்திய கல்லூரிக்கு எதிரான 16 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி

யாழ். மத்திய கல்லூரிக்கு எதிரான 16 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி

யாழ். மத்திய கல்லூரிக்கு எதிரான 16 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2018 | 10:35 pm

Colombo (News 1st) 

யாழ். மத்திய கல்லூரி அணிக்கு எதிரான 16 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 66 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இன்று காலை யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதற்கமைய, சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 47.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது.

எம். அபினாஸ் 84 ஓட்டங்களையும், ஜே.சுபிட்சன் 28 ஓட்டங்களையும், என்.சௌமியன் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் எஸ்.சுஜன் 3 விக்கெட்களையும் எஸ்.மதுசன், கே.இயலரசன், எஸ்.தசோபன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

234 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணியால் 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

அணித்தலைவர் எஸ்.தசோபன் 24 ஓட்டங்களையும் உப தலைவர் கௌதமன் 24 ஓட்டங்களையும் எஸ்.மதுசன் 24 ஓட்டங்களையும் கே.இயலரசன் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் என்.சௌமியன் 3 விக்கெட்களையும், ரி.டினோசன் மற்றும் எம்.அபினாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்