சிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த ரசிகையின் ஓவியம்

சிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த ரசிகையின் ஓவியம்

சிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த ரசிகையின் ஓவியம்

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2018 | 7:23 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அவரது ரசிகை ஒருவரால் கண்கலங்கியிருக்கிறார்.

தந்தை மீது அதிகப் பாசம் கொண்ட சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய வளர்ச்சியைக் காண தனது அப்பா உயிருடன் இல்லையே என்ற வருத்தம் உண்டு.

இதை அவரே தெரிவித்தும் இருக்கிறார்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனுடன் அவரது தந்தை நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை ரசிகை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் மகனின் சினிமா விருது கேடயத்தை கையில் வைத்துக்கொண்டு தந்தை நிற்கிறார். சிவகார்த்திகேயன் சிரித்த முகத்துடன் மைக்கில் பேசிக்கொண்டிருக்கிறார்.

ரசிகையின் இந்த ஓவியத்தை பார்த்த சிவகார்த்திகேயன்,

உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று தெரியவில்லை. மகிழ்ச்சியாகவும், உணர்ச்சிமயமாகவும் இருக்கிறது. அப்பாவுடன் சேர்ந்து ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை. அதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இது எனக்கு ஸ்பெ‌ஷலானது. நன்றியம்மா. தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் தந்தை அன்பின் முன்னே…

என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்