பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் ஒத்திவைப்பு

ஐ.நா. வில் இலங்கை தொடர்பில் நடைபெறவிருந்த பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் ஒத்திவைப்பு

by Bella Dalima 16-03-2018 | 7:46 PM
Colombo (News 1st)  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் இன்று நடைபெறவிருந்த பூகோள காலக்கிரம மீளாய்வு தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு உறுதி செய்தார். இலங்கை தொடர்பில் இன்றும் எதிர்வரும் 21 ஆம் திகதியும் இரண்டு விவாதங்கள் நடத்தப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைன் தெரிவித்திருந்தார். இதேவேளை, எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு தொடர்பான விவாதத்தில் வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக ஜெனிவாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், பூகோள காலக்கிரம மீளாய்வு தொடர்பில் இலங்கை குறித்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு இன்று குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்