ட்ரம்ப் ஜூனியரை விவாகரத்து செய்கிறார் மனைவி வனேஸ்ஸா

ட்ரம்ப் ஜூனியரை விவாகரத்து செய்கிறார் மனைவி வனேஸ்ஸா

ட்ரம்ப் ஜூனியரை விவாகரத்து செய்கிறார் மனைவி வனேஸ்ஸா

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2018 | 6:26 pm

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மூத்த மகன் ட்ரம்ப் ஜுனியரை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி வனேஸ்ஸா அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவியான இவானா ட்ரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், தொலைக்காட்சி பிரபலமாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.

ட்ரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு, மாடலாக இருந்த வனேஸ்ஸாவை திருமணம் செய்தார்.

இருவருமே 40 வயதை எட்டியுள்ள நிலையில், இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், நேற்று மனம் ஒத்து பிரிய இருப்பதாக இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

12 ஆண்டுகள் மண வாழ்க்கையை முறித்துக்கொண்டு அவரவர் வழியில் பயணிக்க இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வனேஸ்ஸா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் ஐந்து குழந்தைகள் மற்றும் ட்ரம்ப் ஜூனியரின் சொத்துக்களை உரிமை கோரப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இதனால், ஐந்து குழந்தைகளும் ட்ரம்ப் வசம் வளரும் என கூறப்படுகிறது.

எனினும், இது தொடர்பாக வெள்ளை மாளிகையோ அல்லது ட்ரம்ப் நிறுவனமோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்