பேஸ்புக் நிறுவன பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை

பேஸ்புக் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

by Staff Writer 15-03-2018 | 6:54 AM
COLOMBO (News 1st) - பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகளை முன்னெடுப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 7 ஆம் திகதி முதல் பேஸ்புக், Whatsapp மற்றும் வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலையை கருத்திற் கொண்டு Whatsapp மற்றும் வைபர் தளங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=Z6xtMId626Q