புகை பிடிப்போருக்கு கேட்கும் திறன் பாதிக்கும்

புகை பிடிப்போருக்கு கேட்கும் திறன் பாதிக்கும் அபாயம்

by Bella Dalima 15-03-2018 | 3:48 PM
புகை பிடிக்கும் பழக்கத்தால் இதயம், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை, கேட்கும் திறனும் பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 50 ஆயிரம் பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கேட்கும் திறன் குறையும் அபாயம் அதிகமாக இருக்கும் என அறியப்பட்டது. புகைப்பழக்கம் கேட்கும் திறனை 20 லிருந்து 60 சதவீதம் வரை பாதிக்கும். ஒலி மாசினால் ஏற்படுவதை விட புகைப்பழக்கம் கேட்கும் திறனை அதிக அளவில் பாதிக்கும். பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின்னரே இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.