நீரிழிவு மருத்துவ உபகரணங்களுக்கு நிர்ணய விலை

நீரிழிவு நோயாளர்களின் மருத்துவ உபகரணங்களுக்கு நிர்ணய விலை

by Staff Writer 15-03-2018 | 1:21 PM
COLOMBO (News 1st) - நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களின் விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த மருத்துவ உபகரணங்கள் பல்வேறு விலைகளில் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக அறிக்கை ஒன்றினூடாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நீரிழிவு நோயாளர்களின் குருதியில் காணப்படும் சீனியின் அளவை சோதனை செய்வதற்கு பயன்படுத்தப்படும் குளுக்கோ மீற்றர் மற்றும் அதற்கான குளுக்கோ அளவீட்டு கருவி என்பன சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. தனியார் வைத்தியசாலைகளில் இவற்றிற்கு பல்வேறு அளவில் பணம் அறவிடப்படுவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் காரணத்தால் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையுடன் கலந்துரையாடி இந்த உபகரணங்களுக்கான விலையை நிர்ணயிக்க தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. https://www.youtube.com/watch?v=HjCMcaZsKAA